கோடம்பாக்கம் Corner

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு .விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரையின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்குள்ள தாய்-சேய் மகப்பேறு பகுதியைச் சுற்றியுள்ள இடம் தூய்மையின்றியும் பாம்பு புற்றும் புதர்களும் மண்டிக் கிடந்தது. மகப்பேறு உள்பகுதியின் தூய்மை குறைவாகக் காணப்பட்டதைப் பற்றி மனம் நொந்து ஒரு விருது விழா நிகழ்ச்சியில் பேச, அது பெரும் சர்ச்சையானது. பின்னர் அந்த தாய்-சேய் பிரிவில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு வேறு கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் அதைச் செய்யத் தான் தயார் என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா. தற்போது புதர் அழகிய குழந்தைகள் பூங்காவாக மாறிவிட்டது. மகப்பேறு மருத்துவப் பகுதியின் உள்ளரங்கமோ வண்ணமிகு ஓவியங்கள், வண்ணப்பூச்சி என மாறி ஜொலிக்கிறது.

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை ‘கத்துக்குட்டி’ படத்தின் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், “ஜோதிகாவின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்றார்.

“தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகாவின் உதவி சரியான முன் உதாரணம்.” என்றார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்.மருது துரை. இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் திரு.வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.