கோடம்பாக்கம் Corner

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

இந்தக் கூட்டணி இணையும் ஆறாவது படத்துக்கு ‘அருவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. அந்தப் படத்தை சூர்யாவின் உறவினரான கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரிக்க முன்வந்தார். ஆனால் இப்போது அந்தக் கூட்டணி உடைந்து விட்டது. முக்கியமான காரணம், சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு ‘போலீஸ் புகழ்பாடும் வேடங்களில் இனி நடிக்கப் போவதில்லை’ என்று சூரியா கூறிவிட்டாராம். அதனால், அருவா படம் கைவிடப்பட்டு விட்டது.

அஜித்தை இயக்க மறுத்த இயக்குநர்!

இதையடுத்து, இயக்குனர் ஹரி தனது மைத்துனர் அருண் விஜய்யை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். சூர்யாவும் இயக்குனர் ஹரிக்கு கொடுத்த கால்ஷட்டை இயக்குனர் பாண்டிராஜுக்கு மாற்றி கொடுத்து விட்டார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் முடிந்தபின் இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்கிறது சூர்யா தரப்பு.

பாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்!

அருவா கூட்டணி முடிந்ததற்கு சாத்தான்குளத்தைத் தாண்டி பல காரணங்கள் உண்டு என சொல்லப்படுகிறது. சூர்யா தயாரித்த பசங்க 2 படத்தையும் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தையும் இயக்கியது பாண்டிராஜ் தான். ஹரி - சூர்யா இடையே சிண்டு முடிந்து விட்டது இயக்குனர் பாண்டிராஜ் தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்