கோடம்பாக்கம் Corner

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

ஆனால், பார்த்திபன் தனது கதாபாத்திரத்தை மட்டும் பார்க்காமல் மொத்தப் படத்தின் கதையையும் பார்ப்பதால்தான் அந்தப் படம் வெற்றிபெறுகிறது. தற்போது சிம்பு பார்த்திபனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். சிம்புவும் பார்த்திபனும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் இருவரும் இன்னும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் நடிகர் பார்த்திபனுடைய சமீபத்திய பதிவு அவர்கள் இருவரும் விரைவில் இணையவிருப்பதை உறுதிபடுத்தி உள்ளது.

’மாநாடு’ படப்பிடிப்பு கோரோனா முழுவதும் முடிந்தால்தான் நடக்கும்!

நடிகர் பார்த்திபன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘சுயம்பு’ சிம்புவை பாராட்டி அவருக்கு பூங்கொத்தும் சாக்லெட்டுமாக கொடுத்தேன்.. .Mr Simbu; Mr.பண்பு ஆனார் என்னுடைய எண்ணப் புத்தகத்தில்! எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னும் ஏன் workபண்ணலேன்னு” அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!” என்று பதிவிட்டுள்ளார்.

அப்பா - மகள் இணையும் படம்!

அத்துடன் சிம்பு தன்னை சுயம்பு என்று குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தையும் பார்த்திபன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்தப் பதிவு சிம்பு மற்றும் பார்த்திபன் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது. அவர்கள் வேலன் படத்தில் நடித்த சிம்புவுக்கு பார்த்திபன் 100 நாள் விருது கேடயம் கொடுக்கும் படத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். அந்தப் படம் கொரோனா முழுமையாக நீங்கினால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும். எனவே அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சின்ன பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து அது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.