கோடம்பாக்கம் Corner

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

விஜய்சேதுபதி, தனுஷ் ஆகியோர் கூட்டணியில் இவரது நகைச்சுவை நன்றாகவே எடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோரோனா காலகட்டத்தில் ரோபோ சங்கரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க கூட விடாமல் பல இடங்களில் போராட்டங்கள் அரங்கேறிய தமிழ்நாட்டில், கோரோனா நோயாளிகளை சந்தித்து அவர்களை மகிழ்ச்சியூட்டியிருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான பட்டுக்கோட்டையில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் பட்டுக்கோட்டையில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரோபோ சங்கர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். அதனால் தனது ஊர் மக்களை மகிழ்ச்சிப்படுத்த, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்ற நடிகர் ரோபோ சங்கர், பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களோடு சிரித்து பேசியதோடு, பல குரல்களில் பேசியும் மகிழ்வித்துள்ளார். அப்போது கொரோனா பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் அவர் கொரோனாவுக்கே டப்பிங் கொடுத்து கற்பனையாகப் பேசியிருக்கிறார். அவர் முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் செய்துள்ளார். இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் சுயநலமின்றி மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்ட ரோபோசங்கரைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்.

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.