கோடம்பாக்கம் Corner

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

அவருக்கும் பிரபல ஆடை அலங்கார நிபுணர் மஹிகா பஜாஜ் இருவருக்கும் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்காக 100 பிரபலங்களை அனுமதிக்கும்படி சிறப்பு அனுமதியை ராணா சார்பில் பெற்றிருந்தனர். ஆனால் 1000 பிரபங்களுக்கு அழைப்பு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் 30 பேர் கொண்ட குழுக்களாக 2000 பேர் ராணா திருமத்துகு வந்துள்ளனர். இதனால் பிரம்மாண்டமாக நடைபெற்றது இவர்களின் திருமணம். தற்போது புகைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன.

சூர்யா - பாரதிராஜா - மீரா மிதுன் : ஒரு முக்கோண மோதல்!

இந்தத் திருமண விழாவில் தனது கணவர் நாக சைதன்யாவுடன் கலந்து கொண்டார் நடிகை சமந்தா. அப்போது எடுத்த புகைப்படங்களில் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை இதுவரை 17 லட்சம் பேருக்கும் மேல் லைக் செய்துள்ளனர். சமந்தா போல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தனது மனைவியுடன் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். அவரும் இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்தப் புகைப்படம் அவ்வளவாக லைக்குகளைப் பெறவில்லை. சமந்தாவின் மீது ரசிகர்கள் எவ்வளவு பைத்தியமாக இருகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு புகைப்படத்துக்கு கிடைத்த லைக்குகளே ஆதாரம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.