கோடம்பாக்கம் Corner

பூட்டிய வீட்டுக்குள் நடக்கும் பரிச்சயமான நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் சண்டை, சச்சரவுகள், காதல் என பலவற்றையும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் நிகழ்ச்சியாக் ஒளிப்பரப்பாகி வந்தது பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது ஓவியா - ஆரவ் இடையிலான காதல் விவகாரம் தான். இந்நிலையில் இவர்கள் காதல் நிகழ்ச்சியிலேயே பிரேக் அப் ஆகிவிட்டது. பின்னர் வெளியே வந்து அவர்கள் காதலிப்பதாக விளம்பரத்துக்காக செய்திகள் பரப்பி வந்தனர். பின்னர் அதிகாரபூர்வமாக இருவரும் உறவில் இல்லை என அறிவித்து விட்டனர். அதைத் தொடர்ந்து ஓவியா பலமுறை தான் சிங்கிள் என கூறிவிட்டார். மேலும் தனது காதல் தோல்வியின் பொருட்டு தலைமுடியை கண்ணாபின்னாவென்று வெட்டிக்கொண்டு அனுதாபம் தேடினார். ஓவியாவை முழுவதும் சப்போர்ட் செய்து வந்த ரசிகர்கள் அவரது பெயரால் ‘ஓவியா ஆர்மி’ என்றல்லாம் அலப்பறை செய்தார்கள். ஆனால், அது எல்லாம் சிறிது காலம் தான். பின்னர் ஓவியாவை மறந்தே போனார்கள்.

இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன் ஆரவ்வுக்கும், இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வரும் ஜோஸ்வா படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் திருமணம் நடந்தது. ராஹியை சிறு வயதிலிருந்தே ஆரவ் காதலித்து வந்ததாகவும். அதனால் இவர்களுக்கு ஒருஇதரப்பு பெற்றோரு சம்பம் தெரிவிக்க நிச்சயதார்த்தமும் நடந்தது. தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது, இத்திருமணத்தில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் எல்லோரும் கலந்துக்கொண்டுள்ளனர். கவிஞர் சினேகன், ஹரிஷ் கல்யாண், பிந்து மாதவி உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிந்து மாதவி தனது குழுவினருடன் கலந்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதன் மூலம் ஓவியா கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்தப் படத்தில் ஓவியா மட்டும் மிஸ்ஸிங். அவரை ஆரவ் அழைத்தாரா என்பது குறித்து பிந்து மாதவி தரப்பில் விசாரித்தபோது தெரியவில்லை என்றார். பின்னர், ஆரவ் தரப்பில் விசாரித்தபோதுதான் தெரிந்தது. ஆரவ் தனது மேனேஜரை அனுப்பி அழைப்பிதழ் அனுப்பியும் போனில் அழைத்தும் ஓவியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் ஓவியா நாகரீகம் கருதியும் பெற்றோரின் அறிவுரை ஏற்றும் ஆரவ் திருமணத்தை தவிர்த்துவிட்டதாக தெரியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்