கோடம்பாக்கம் Corner

திரையுலப் பின்னணியோ, பிரபலமானவர்களின் குடும்பப் பின்னணியோ இல்லாமல் திரையில் வந்து ஜெயித்து வெற்றிபெறுபவர்கள் மிகக் குறைவு.

அவர்களில் அஜித்தும் சிவகார்த்திகேயனும் முக்கியமானவர்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் நல்ல நடிப்புத் திறமையுடன் வசனம் எழுதும் திறன், பாடல் எழுதும் திறன், திரைக்கதை அறிவு, அளப்பறிய டைமிங் நகைச்சுவை உணர்வு என பன்முகத் திறமைகளின் களமாக விளங்கிவருபவர். இவரை சிறு குழந்தைகளுக்கு பிடித்துப்போய்விட்டதால், அஜித், விஜய் படங்களுக்கு அடுத்த நிலையில் இவரது படங்களின் வியாபாரமும் வசூலும் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத மாஸ் கதாநாயகன் ஆகிவிட்ட சிவகார்த்திகேயன் தன்னை ஒரு கதாநாயகனாக, கதையின் நாயகனாக உருவகப் படுத்திக் கொள்வதற்கும் தனது திறமையை அடுத்தவர்களுக்கு நிரூபித்து காட்டுவதற்கும் அவர் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட திரைப்படம்தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான‘மெரினா’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும் கதாநாயகனாக இல்லை, அதேபோலதான் கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இரு நாயகர்களில் ஒருவராக வலம் வந்தார். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நான் தனித்து நின்று ஒரு ஹீரோவாக தனது முத்திரையை ஆழமாகப் பதித்தார் சிவகார்த்திகேயன். காமெடியில் கலக்கிய சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கூட்டணியை அவ்வளவு எளிதாக தமிழக மக்களால் மறந்துவிட முடியாது. லதா பாண்டி, போஸ் பாண்டி, சிவனாண்டி என பெயர்கள் முழுவதுமே நம் மனதில் ஆழப் பதிந்தவை. அதற்குள்அந்தத் திரைப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. சிவகார்த்திகேயன் தன்னை ஒரு கதாநாயகனாக நிரூபித்து ஏழு வருடங்கள் ஆகி விட்டது என்றே கூறலாம். இந்த நிகழ்வினை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் அழகாக ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இதனால் #7YearsofVaruthapadathaVaalibarSangam என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்