கோடம்பாக்கம் Corner

'கொரோனா' நோய்த் தொற்று காரணமாக உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தும் பலர் வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில்

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம் ஏழை நடுத்தர குடும்பத்தினருக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார். அதேபோல பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை பெற்றுக்கொடுக்கும் பணியையும் செய்யத் தொடங்கினார். இதனால் விஜய் தேவரகொண்டாவின் சமூக சேவை ஆந்திர அரசியல்வாதிகள் பலரை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு இருந்தது.

இந்நிலையில் கோரோனா ஊரடங்கு முடிந்து ஆந்திராவில் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. ஆனால் விஜய் தேவரகொண்டாவின் பெயரைப் பயன்படுத்தி பலர் பணம் சம்பாதித்து வருவது அவர் காதுக்கு வந்ததால் தற்போது அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில்: ''சில தயாரிப்பு நிறுவனங்கள், நான் அவர்களின் படத்தில் நடிப்பதாக பொய் சொல்லி, நடிகர்களின் தேர்வை நடத்தி வருவதாக அறிந்தேன். நான் எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும், அதை முறையே எனது சமூக வலைதளங்களில் அறிவிப்பேன். அப்படி போலியாக ஆடிஷன் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தயவு செய்து, இது போன்ற தவறான தகவல்களை அப்படியே நம்பாதீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.