கோடம்பாக்கம் Corner

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் மாஸ்டர்.

இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, லோகேஷ் அடுத்து யாருடன் இணையப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. முதலில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சூப்பர் ஸ்டாருடன் தற்போது லோகேஷ் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறப்படுகிறது

‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா!

இந்நிலையில், மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் கமல்ஹாசனே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு 'எவனென்று நினைத்தாய்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கனா மீது பாயும் பாட்ஷா கதாநாயகி!

இதற்கு முன்னர் கைதி திரைப்படம் கமல்ஹாசனின் விருமாண்டியை உருவகப்படுத்தி எடுத்ததாகவும் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தின் விஜய் கதாபாத்திரத்தை நம்மவர் திரைப்படத்தில் வரும் கமல் ஹாசன் கதாபாத்திரத்தை மனதில் வைத்து உருவக படுத்தியதாகவும் லோகேஷ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே இன்று மாலை லோகேஷ் அறிவிக்கப்போகும் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.