கோடம்பாக்கம் Corner

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர்.

அதிலும் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வார். அதுதான் அவர் 82 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கி வருகிறது. ஆகையால், தன்னைப் போலவே எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக GK Reddy என்ற அவரது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார்.

முக்கியமாக, இந்த கொரோனா காலத்தில் உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை விவரிக்கிறார். பல்வேறு உடற்பயிற்சிகளை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த காணொளியில் அவரே உடற்பயிற்சிகளையும் செய்தும் காட்டுகிறார். விஷாலின் அப்பா ஒரு கிரானைட் விற்பனைத் தொழில் அதிபர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.