கோடம்பாக்கம் Corner

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விக்ரம் சில காட்சிகளில் பல தோற்றங்களில் வர இருக்கிறார். இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் லலித்குமார் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தபோது, கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதியிலேயே படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் ரஷ்யா சென்று படப்பிடிப்பைத் தொடர முடிவு செய்து ரஷ்ய லொக்கேஷன் மேனஜர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் 2021 மார்ச் 31-ம் தேதிவரை வெளிநாட்டினர் எவருக்கும் ரஷ்யாவில் அனுமதியில்லை. ரஷ்யாவில் இருப்பவர்கள் வேண்டுமானால் வெளியேறட்டும் என்று கூறுவிட்டார்களாம்.

எனவே விட்ட இடத்திலிருந்து ரஷ்யாவில் படமாக்கிய காட்சிகளை சென்னையிலேயே ஸ்டுடியோவில் க்ரீன் மேட் பின்னணியில் படமாக்கி, கிராபிக்ஸ் செய்துவிடுவதென்று முடிவு செய்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் கூறுகிறார். இதற்கான ஸ்டுடியோ பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தீபாவளிக்குள் ஒட்டுமொத்த 'கோப்ரா' படப்பிடிப்பையும் கிராஃபிக்ஸ் பணிகளையும் முடித்துவிடப்போவதாக தயாரிப்பாளர் லலித்குமார் அறிவித்துள்ளார். வரும் 2021 பொங்கலுக்கு 'மாஸ்டர்' வெளியாவதால், கோடை விடுமுறைக்கு 'கோப்ரா' வெளியிடப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்