கோடம்பாக்கம் Corner

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகாவிடம் ஒரு செயலுக்காகப் பாராட்டுப் பெற்றுள்ளார். காதுகேளாதவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு கைகொடுக்கும் சைகை மொழியை இந்தியாவின் 23-வது அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி மத்திய அரசை அணுகியிருப்பதுடன் அதற்காக தொடர் எடுத்து வருகிறார். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு கணவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தீபிகா படுகோன்.

கமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது !

இந்தப் பாராட்டும் பதிவும் பிரபலமானதைத் தொடர்ந்து ரன்வீர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பானது நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது. மேலும் ரன்வீர் தன்னுடைய இசை நிறுவனமான இன்க்இன்க் (IncInk) மூலம் நவ்ஸார் இரானி என்பவரை வைத்து காது கேளாதாருக்கான இசை நிகழ்ச்சியையும் ரன்வீர் சிங் நடத்தியுள்ளார்.

சொந்த செலவில் கால்வாய் வெட்டும் கார்த்தி!

இந்திய சைகை மொழி ஐஎஸ்எல் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ரன்வீர் சிங்கின் இந்த புதிய முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு வீடியோவையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், “பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்திய சைகை மொழியை 23வது அலுவல் மொழியாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் மகிழ்ச்சியை தருகின்றன. இந்திய சைகை மொழி அழகானது. காது கேளாதோர் சமூகத்துக்கு ஆதரவு தரும் நடிகர் ரன்வீர் சிங்குக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்