கோடம்பாக்கம் Corner

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

கமல்,ரஜினி போன்ற முன்னணி நட்சத்திர படங்கள் கூட இந்த நெருக்கடியை சந்தித்தன. அரைகுறை ஆடைகளுடன், கவர்ச்சி நடனம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த சிலுக்கு சுமிதா அவர்களுக்கு முதன்முறையாக கண்ணியமான ஒரு வேடம் கொடுத்தது இயக்குனர் பாரதிராஜா மட்டுமே. கார்த்திக் - ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகர் தியாகராஜனுக்கு மனைவியாக நடித்திருப்பார் சில்க் ஸ்மீதா.. அந்தப் படத்தில் தன் கணவன் தனது வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனின் மனைவியோடு பாலியல் வல்லுறவு செய்யும் தருணத்தில் காவலுக்கு நிற்க வேண்டிய துர்ப்பாக்கியவதியாக மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி இருப்பார் சிலுக்கு சுமிதா. 'வேலைக்காரன் எனக்கு கூலி கொடுத்து விட்டான். நீ என்ன கூலி கொடுக்கப் போகிறாய்?' என கணவனை சட்டையை பிடித்து உலுக்கி கேட்கும் காட்சி சிலுக்கு சுமிதாவின் ஆகச்சிறந்த நடிப்புக்கு ஒரு சாட்சி.

விஜய்சேதுபதி படம் போனியாகாது!

சிலுக்கு சுமிதாவின் வெற்றிக்கு அவருக்கு பின்னணி குரல் கொடுத்த ஹேமலதாவின் குரல் வளமும் முக்கிய காரணம். மூன்றாம் பிறையில், ஊட்டி குளிரை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மிகக் குறைந்த ஆடையில் வலம் வருவார் சிலுக்கு சுமிதா.

கோலிவுட்டில் வெடிக்காத 2020 தீபாவளி!

அவரது வயோதிக கணவர் வியந்து கேட்பார் 'இந்த குளிரில் எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது என்று!'. 'ஃபயர் இன்சைட் மீ' என ஆங்கிலத்தில் பதில் கொடுக்கும் போது உடல் மொழியிலும் குரல் மொழியிலும் ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை உணர முடியும். ஆம்! உண்மையில் மிகச்சிறந்த நடிப்புத்திறன் கொண்ட ஒரு சிறந்த கலைஞரை வெறும் உடலாகப் பார்த்தது தமிழ் சினிமா. அதனால்தான் விஜயலட்சுமி எனும் அவரது இயற்பெயரை இச்சைக்குரிய ஓசையும் சிலுக்கு சுமிதா என்று மறுபெயர் சூட்டியது. நேற்று செப் 23 சில்க் ஸ்மீதா என்கிற விஜயலட்சுமியின் நினைவு நாள்.

4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்