கோடம்பாக்கம் Corner

கோரானாவுக்கு நடுவில் ஷங்கர் கேக் ஊட்ட, மணிரத்னம் பாராட்ட மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாடிய புகைபடங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் அவரிடம் ‘பிறந்தநாள் அவசியாமா?’ என்று உரிமையுடன் கேட்க விரும்பினோம்.

அதை கேட்டுவிட்டோம். ஆனால் அந்தக் கேள்விக்கு முன் ‘கோரோனா ஊரடங்கு காலம் உங்களுக்குத் துயரமானதாக இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்விக்கு இயக்குநர் மிஷ்கின் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளிவிட்டார். கொரோனா பெருந்தொற்றால் உலகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் ஒரு இழப்பைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், இயக்குநர் மிஷ்கின் இந்த பெருந்தொற்று உருவாக்கிய ஊரடங்கு காலத்தை வேறு அனுபவமாகப் பார்க்கிறார். ஒரு மனிதனின் பார்வைக்கும் கலைஞனின் பார்வைக்கும் இடையிலான இடைவெளியை அவரது பதில் வேறு விதமாக இட்டு நிரப்புகிறது.

விஜய்சேதுபதி படம் போனியாகாது!

4தமிழ் மீடியாவுக்காக அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ‘கோரோனா ஊரடங்கு காலம் உங்களுக்குத் துயரமாக இருக்கிறதா?’என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்: “கோரோனா காலத்தை நான் ஒரு பெரிய வரபிரசாதமாகப் பார்க்கிறேன். இக்காலத்தை ஒரு தாத்துவார்த்த பார்வையுடன் அணுக விரும்புகிறேன். பஞ்ச காலத்தை நமது தலைமுறை பார்த்ததே இல்லை. அதேபோல பிளேக் போன்ற கொள்ளை நோய் காலத்தையும் நாம் பார்க்கவில்லை. அனைவரும் ஓடிக்கொண்டே இருந்தோம். நான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்.

நமது ஓட்டம் யாருக்காக, அதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பது பற்றி யாரும் யோசிக்கவே இல்லை. இன்னும் எளிய மனிதர்கள் வெறும் வயிற்றுப்பாட்டுக்கான ஓட்டமாக இருந்தது. வயிற்றுக்காக ஓடுபவனிடம் ஒரு கணம் நின்று யோசி என்று கூற முடியாது. ஆனால், பண வெறி, பொருள் வெறி, நுகர்வு வெறி கொண்டவர்கள் நின்று யோசிக்க மிகப்பெரிய வாய்ப்பை கொரொனா வழங்கியிருக்கிறது. நான் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவந்தான். நான் இப்போது என்னைப் பற்றி யோசிக்கிறேன். என்ன செய்துகொண்டிருக்கிறோம் என யோசிக்கிறேன்.

எஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் பேராசை!

கடந்த 8 மாத காலமாக உலமே ஒடுங்கிப் போய் கிடக்கிறது. இயற்கை அன்னை கோரோனா என்ற பெயரால் வெறி கொண்டு ஓடிய நம்மை தலையில் தட்டி உட்கார வைத்திருக்கிறாள். படைப்பாளிகள், கலைஞர்கள், போராளிகள், சாமானியர்களை விடுங்கள். பணம், நுகர்வு, உயர்வுக்கான உழைப்பு என ஓடுகிறவர்கள் கொஞ்சமாவது அவர்களுக்கு மழை கொடுக்கும் வானத்தைப் பற்றி யோசித்திருக்கிறார்களா? அவர்கள் கால் பதித்து நிற்கிற பூமியைப் பற்றி யோசித்திருக்கிறார்கள். கடந்த 8 மாதங்களில் ஓசோனின் ஓட்டை அடைபட்டிருக்கிறது என்கிறது அறிவியல். அப்படியானால் நாம் நமது பூமியை எவ்வளவு அழுக்காக்கி மாசாக்கி வைத்திருக்கிறோம். நாம் என்றால் நாம் வேலை செய்யும் கார்ப்பரேட் முதலாளிகளையும் சேர்த்தே தான் சொல்கிறேன்.

இன்னொருபக்கம் இந்த கோரோனா காலத்தை உளவியல் ரீதியாக எப்படிப் பார்க்கிறேன் என்றால், இக்காலத்தில் நாம் அமைதியாகிவிட்டோம். இது அத்தனை எளிதாக நடந்துவிடுவது அல்ல. இப்போது சக மனிதனின் வலி நமக்குத் தெரிகிறது. ஒரு சகமனிதனாக நீங்கள் என்னைப் பார்த்து உங்களுக்கு என்ன வலி என்று கேட்டீர்கள் என்றால் ‘எனக்குச் செலவுக்கு பணமில்லை’ என்பதுதான் தற்போது மிகப்பெரிய வலி. ‘துப்பறிவாளன் 2’படம் நின்று போனதாக கடந்த 8 மாதங்களாக என்னிடம் சுத்தமாக பண வரவு இல்லை. அதனால், வெற்றிமாறனிடமும் தியாகராஜன் குமாரராஜாவிடம் கேட்டேன். அவர்கள்தான் பணம் கொடுத்தார்கள். இதைச் சொல்வதற்கு வெட்கப்படவில்லை.

உடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்!

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சினிமாகாரர்கள் என்றால் அவர்களிடம் விலை உயர்ந்த கார் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் மாதம் 70 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருக்கிறேன். கடந்த 4 மாதங்களாக வாடகைக் கொடுக்கமுடியாமல் இருக்கிறேன். இந்த சமயத்தில்தான் கோரோனா என்னைச் சிந்திக்க வைத்துவிட்டது. ‘நாம் 70 ஆயிரம் வாடகை வீட்டில்தான் வசிக்க வேண்டுமா?’என்று என்னையே கேட்டுக்கொள்ள வைத்துவிட்டது. நான் அதிக வாடகையுள்ள வீட்டை காலி செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். எனது உதவியாளர்கள் ‘அய்யோ சார் வேணாம், அவசரப்படம் வேண்டாம்’என்கிறார்கள். கோரோனா ஞானக்கண்களை திறந்த பிறகும் குருடனாக வாழ முடியாது அல்லவா? ஆப்ரிக்காவில் சொல்லுவார்கள்; ‘வீடு என்றால் அடைதல்’. அதாவது சிங்கமும் பாம்பும் தன்னைக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக இரவில் வீடடைதல் ஒரு கலாச்சாரமாக ஆப்ரிக்க ஆதிக் காலாச்சாரத்தில் உருவாகியிருக்கிறது.

எனவே எனது கடைசி 25 வருடங்களை மண்ணோடு மண்ணாக வயல்வெளியில் பயிர் செய்துகொண்டு, அந்த வயல்களுக்கு நடுவே ஒரு மண் வீட்டில் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த வீட்டில் புத்தகங்கள் இருக்கலாமே தவிர, ஒரு மின் விசிறி கூட இருக்கக் கூடாது. ஒரு பனையோலை விசிறி போதும் என மனம் எண்ணுகிறது. அங்கே நான் வைத்திருக்க விரும்பும் புத்தகங்களில் காந்தியின் ‘எக்ஸ்பிரிமெண்டல் வித் ட்ரூத்’, பௌத்த புத்தகங்கள் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். பொருள் குறித்த தெளிந்த பார்வையை கோரோனா எனக்கு வழங்கிவிட்டது. எனது சக மனிதன் எனக்கு அடிக்கடி போன் செய்து ‘சார் குழந்தைக்கு பால் வாங்க காசு இல்ல சார்.. “ என்று கேட்கும்போது மனிதனுக்கு மூன்று வேலை உணவுக்கு மட்டுமே பணம் தேவை என்பதை உணர்த்திவிட்டது.

இந்தப் புகழ், தேவைக்கு அதிகமான பணம், இந்தக் கார், இவ்வளவு பெரிய வீடு இவ்வளவும் தேவையில்லை என்பது தெரிய வந்துவிட்டது. எப்போதும் எனது பிறந்தநாள் என்றாலே 100-க்கும் அதிகமான இயக்குநர்கள் திரண்டுவிடுவார்கள். மகிழ்ந்துகொண்டாடும் பெரிய பார்ட்டியாக அது இருக்கும். ஆனால் இந்தமுறை அனைவரும் கஷ்டத்தில் இருக்கும்போது அப்படிக் கொண்டாட வக்கில்லை. ஆனால், இயக்குநர் நண்பர்கள் ‘மிஷ்கின் உனது பிறந்தநாளை ஒரு சாக்காக வைத்துக்கொண்டாவது ஒரு இரவைச் சந்தோஷமாகக் கழிக்கவும் வெளிக்காற்றைச் சுவாசிக்கவும் வருகிறோம்’ என்றார்கள். அவர்களிடம் ஒரு பத்துபேர் மட்டும் வாருங்கள் என்று கூறியிருந்த நிலையில் 50 பேர் வந்துவிட்டார்கள். அந்த வகையில் இது மறக்கமுடியாத பிறந்தநாள்தான். எனது பிறந்தநாளின் நள்ளிரவில் ‘பிசாசு 2’ படத்தையும் அறிவித்தோம். மேலுமாக இந்த கொரோனா காலத்தில் நிறைய புத்தகங்களைப் படித்து முடித்தேன். நிறைய இசை கேட்டேன். எனது மகளுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கோரோனா தரும் தரிசனங்களோடு வேதனைகளும் நிறைந்திருக்கும் இந்தத் தருணத்தில் நிறைய பூக்களும் என்னைச் சுற்றி மலர்ந்திருப்பதைக் கண்டேன்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.