கோடம்பாக்கம் Corner

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

இதனால், 2021 ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு இரு தினங்கள் முன்னதாக படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக இப்போதே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

மகனுடன் கொடைக்காணல் செல்லும் விக்ரம்

இதுவொருபுறம் இருக்க, ‘மாஸ்டர்’படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எந்தமாதிரியான காட்சிகள் இருக்கிறது என்று விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களும் கேட்டதைத் தொடர்ந்து மூன்று கட்டமாக அவர்களுக்கு சென்னையில் படம் திரையிடப்பட இருப்பதாக தகவல் வருகிறது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கான மாஸ் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் இருக்கின்றன. ஆனால் இதில் தளபதியின் வழக்கமான நகைச்சுவையையும் காதல் காட்சிகளையும் எதிர்பார்க்க முடியாது இயக்குநர் தரப்பிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா!

3 பாடல்கள் மட்டுமே படத்தில் உள்ளதாகவும் 'அந்த கண்ண பாத்தாக்கா' பாடல் பெயரளவுக்கு மட்டுமே காதல் பாடல்போல வைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. வடசென்னைப் பகுதியான ராயபுரம் பின்னனியில் ஒரு குட்டி ஸ்டோரி பாடலும் வாத்தி கம்மிங் பாடல் மிகவும் உற்சாகம் அளிக்க கூடிய வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறதாம். வாத்தி கமிங் பாடலுக்காக வெறும் 90 செகண்டுகள் மட்டுமே தளபதி விஜய் ஆடி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்