கோடம்பாக்கம் Corner

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்படங்களின் தவிர்க்க முடியாத கவர்ச்சி நட்சத்திரமாக கோலோச்சியவர் சில்க் ஸ்மிதா.

அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிப்புக் கலைஞர். ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் காயத்ரி பிலிம்ஸ் முரளி சினி ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

ஏற்கெனவே பாலிவுட்டில் ‘டர்ட்டி பிக்சர்’என்ற தலைப்பில் சில்க் சுமிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதாகக் கூறி ஒரு குப்பையை எடுத்திருந்தனர். சில்க் சுமீதா எனும் உயர்ந்த கலைஞருக்கு அவர்கள் களங்கம் கற்பித்திருந்தார்கள். தமிழில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவொருபுறம் இருக்க, பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார். “சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” எனும் மணிகண்டன் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.