கோடம்பாக்கம் Corner

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்த ராஜாவா தான் வருவேன்’.

அதன்பிறகு அவர் பல படங்களில் நடிப்பதாகக் கூறப்பட்டாலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்துவந்தார். கோரானா காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியுடன் நின்றுபோனது. கோரோனா முற்றிலுமாக அகற்றப்பட்டால் தவிர, மாநாடு படத்தை எடுக்க முடியாது. ஏனென்றால் அதற்கு 3000 துணை நடிகர்கள் கட்சித் தொண்டர்களைப்போல ஒன்றுகூட வேண்டும். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுசீந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் சிம்பு நாயகனாக நடிப்பதாக பதிவிட்டு இருந்தார்.

இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி போன்ற படங்களை இயக்கியவர். இவர் சிம்புவை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் கதாநாயகியாக நடிக்க நிதி அகர்வால் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஜெயம்ரவி ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்குகிறது. 40 நாட்களில் முடிந்து இந்தப் படத்தை வெளியிட இருப்பதாகத் தெரிகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.