கோடம்பாக்கம் Corner

மத்திய அரசு அக்டோபர் 15-ம் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரையரங்குகளைத் திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், கேரள அரசாங்கம் டிசம்பர் மாத இறுதிவரை திரையரங்குகளைத் திறக்கமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதையொட்டி தமிழக அரசும் திரையரங்குகளைத் திறப்பதாக வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறது. உறுதியான முடிவு ஒன்றை எடுக்க சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு தகவல் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ;

“திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறோம் என்ற அவர், கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது இந்த்ச் நேரத்தில், 3 மணி நேரம் ஒரே அரங்கில் இருக்க வேண்டிய நிலை உள்ளது இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மத்திய மற்றும் மாநில சுகாதார குழுவுடன் ஆலோசித்து அதன் பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பிறகு திரையரங்கள் திறப்பது குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், செயற்குழுவில் ஏழாம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் கூறியிருக்கிறார்கள் அதன்படி அறிவிப்பார்கள் எங்களுக்கும் உங்களைப் போன்று முடிவு என்னவென்று நாளை அறிவித்த பின்பு தான் தெரியவரும் என கூறினார்.

இறுதியாக OTT யில் படம் வெளியவது குறித்து பேசிய அவர், OTT என்பது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் தளம் அல்ல, கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிக ஏற்பாடாக அதில் படங்களை வெளியிட்டால் நல்லது நிரந்தரமாக வெளியிட்டால் திரைத்துறை பாதிக்கப்படும் என்ற அவர், திரையரங்கு சென்று படம் பார்த்தால் தான் மக்களுக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும் என்றார். மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்த அரசு அவர்களுக்கு உதவும் என தெரிவித்தார். மீண்டும் தமிழகத்தில் தொற்றுக்கள் அதிகரித்துள்ள நிலையில் திரையரங்குகள் தற்போதைக்குத் திறக்கப்படாது என்பதே நிதர்னமாக உள்ளது/

4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.