கோடம்பாக்கம் Corner

இந்தியாவையே கிடுகிடுக்க வைத்த பங்குச் சந்தை ஊழல் உட்பட பல லட்சம் கோடி மக்கள் பணத்தை வங்கிகளின் வராக்கடனாக்கி ஏமாற்றி ஏப்பம் விட்ட வடக்கிந்திய தொழிலதிபர்கள், பங்குச்சந்தை தரகர்கள் என பலர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஊழல் செய்ததும் இந்திய நாட்டைவிட்டே ஓடிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தங்கள் மீது வழக்குகளும் நிதிமன்ற ஊத்தரவுகளும் பாயாமல் இருக்க, ஊழல் செய்த பணத்தின் ஒரு பகுதியை ஆளும் அரசியல் வாதிகளுக்கும் அடைக்கலம் புகும் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் கொட்டிக்கொடுத்து தப்பித்துக்கொள்வார்கள்.

க.பெ.ரணசிங்கம் - விமர்சனம்

இவர்களின் தில்லாலங்கடிகளை வெட்ட வெளிச்சமாக்கும் விதமாக வெளிவந்த திரைப்படங்கள் பல்வேறு தணிக்கை விதிகளுக்கு ஆளாகி மக்களைச் சென்று அடையாமல் போய்விட்டன. ஆனால் ஓடிடி தளங்கள் முழு சுதந்திரமானவை. பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட இந்திய தொழிலதிபர்கள் தொடர்பான வெப் சீரீஸ்கள் நான்கினை நெட்பிளிக்ஸ் தாயாரித்திருந்தது. ஆனால் அவற்றை வெளியிட சம்பந்தப்பட்ட ஊழல் பேர்வழிகளின் பினாமிகள் தடைகேட்டு வழக்குத் தொடுத்திருந்தனர். தற்போது அந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

கார்த்தியின் ‘சுல்தான்’முடிந்தது!

இந்த ஆசாமிகளைப் பற்றி சீரீஸ்களை வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பல சர்ச்சைகளில் சிக்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லயா, வைர வியாபாரி நிரவ் மோடி, சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு மற்றும் சகாரா நிறுவனத்தின் சுபத்ரா ராய் உள்ளிட்டோர் குறித்த வெப் தொடரை பேட் பாய் பில்லியனர்ஸ் இந்தியா (Bad Boy Billionaires - India) என்ற பெயரில் வெளியிட இருந்த நிலையில், பீகார் நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு கடந்த சனிக்கிழமை விலக்கப்பட்ட நிலையில், சத்யம் நிறுவனத்தின் ராமலிங்க ராஜுவை தவிர மற்ற மூவரின் வெப் தொடரை நெட் பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்தத் தொடர்கள் பற்றி நெட்டிசன்கள் அதிமாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.