கோடம்பாக்கம் Corner

உலகளாவிய ரீதியில், முந்தைய பிரீமியர்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்த அமேசானின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் சேவையில் 19 திரைப்படங்களுக்கு வழங்க இருக்கிறது.

வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங், பூமி பெட்னேக்கரின் துர்காவதி, ஆனந்த் தேவரகொண்ட நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), மாதவன் நடித்த மாரா (தமிழ்), பீமா சேனா நளமகாராஜா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்), இந்த படங்கள் 2020 அக்டோபர் 15 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும்.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்- அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக
பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு 129 ரூபாயில் அல்லது வருடத்திற்கு 999 ரூபாயில் பெற்றுக் கொள்ள முடிகிறது.

முதல் கட்டமாக 5 மொழிகளில் 10 படங்களை நேரடி சேவையில் அறிமுகப்படுத்தும் அமேசான் ப்ரைம் வீடியோவிற்கு, இது இந்தியா முழுவது 4000 க்கும் மேற்பட்ட நகரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களான பென்குவின், பொன்மகள் வந்தாள், லா, பிரெஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாயும், சி யு சூன், வி மற்றும் நிஷப்தம் போன்றவை சொந்த மாநிலங்களைத் தவிர்த்து வெளிமாநிலங்களான லக்னோ, கொல்கத்தா, புனேவிலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றன. 180 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள தொலைக்காட்சி பார்வையாளர்களால் இந்த திரைப்படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு ரசிக்கப்பட்டன, ப்ரைம் வீடியோவின் உலகளாவிய பிரீமியர்கள் இந்திய தயாரிப்பாளர்களை இன்னும் அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய வைத்தது.

அமேசான் ப்ரைம் வீடியோ, இந்தியா கண்டெண்டின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், "நல்ல கதைகளுக்கு எல்லை என்பதே கிடையாது. பார்வையாளர்கள் எப்போதும் சிறந்த பொழுதுபோக்கைத் தான் விரும்புவார்கள், மற்றும் நல்ல கதைகள் எப்போதுமே பார்வையாளர்களின் பாராட்டைப் பெற தவறாது. எங்கள் நேரடி சேவையில் வெளியான திரைப்படங்களின் வெற்றியே இதற்கு ஒரு சான்றாகும். இது எங்களை வாடிக்கையாளர்களுக்கு நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து கொடுக்க ஊக்குவிக்கிறது. நேரடி சேவையில் எங்களது முந்தைய வெளியீடுகள் 180 நாடுகளில் பார்க்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்த இந்த மகத்தான வரவேற்பிற்காக மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த பண்டிகை காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த 9 வெளியீடுகளை 5 மொழிகளில் கொண்டுவருவதில் உற்சாகமாக இருக்கிறோம்.” என்றார்.

ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்) , இது அமேசான் ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 15 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

சகாரியா முகமது இயக்கத்தில் வரவிருக்கும் மலையாள நகைச்சுவைத் திரைப்படமான ஹலால் லவ் ஸ்டோரியில் இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், ஷரஃப் யு தீன், கிரேஸ் ஆண்டனி மற்றும் சவுபின் ஷாஹிர், பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பீமா சேனா நளமஹராஜா (கன்னடம்)அமேசான் ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 29 ஆம் தேதி திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சரகூர் இயக்கிய கன்னட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தான் பீமா. இப்படத்தில் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண், பிரியங்கா திம்மேஷ், ஆச்சியுத் குமார் மற்றும் ஆத்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சூரரை போற்று (தமிழ்), அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 30 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாக இருக்கும் அதிரடி டிராமா தமிழ் மொழி படம் தான் சூரரை போற்று. சூர்யா கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை சூரியாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மோங்காவின் சீக்கியா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” புத்தகத்தின் கற்பனையான பதிப்பாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்