கோடம்பாக்கம் Corner

நிசப்தம் படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா ஷெட்டி கடினமாக உழைத்துள்ளார்.

இதற்காக ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என அப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் மதுர்கர் கூறியிருக்கிறார். ஆனால் அனுஷ்காவின் உழைப்பு அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது. காரணம், அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான இப்படம் சமீபத்திய ஓடிடி தோல்விப் படங்களில் பெரும் நஷ்டத்தை அந்த நிறுவனத்துக்கு ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானபோதும் இப்படத்தை இதுவரை இரண்டு லட்சம்பேர் மட்டுமே பார்த்துள்ளதாக அமேசான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடியிலும் தோல்வி உண்டு என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணமாகியிருக்கிறது. இருந்தும் அனுஷ்கா இந்தப் படத்துக்காகப் போட்ட உழைப்பை இயக்குநர் ஹேம்ந்த மதுர்கர் நன்றியுடன் தனது சமூக வலையில் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில்: “அனுஷ்கா சைகை மொழிகளை கற்றுக் கொண்டார், நான் அவரிடம் படத்தின் கதையை படித்துக் காட்டியபோது அவரது கதாபாத்திரம் ஒரு ஒவியர் என்று கூறினேன். ஒரு படத்தில் திடீரென ப்ரஷ் உடன் தோன்றும் ஒரு நடிகையாக இருக்க அனுஷ்கா விரும்பவில்லை. தான் ஒரு தொழில்முறை ஓவியராக தெரிய வேண்டும் என்று அவர் விரும்பினார். கதபாத்திரத்துக்காக அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் பிடித்தது. அவர் ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார். ஒன்று இந்திய சைகை மொழி மற்றொன்று சர்வதேச சைகை மொழி. இரண்டில் எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டார். இரண்டையுமே கற்றுக் கொள்ளுமாறு அவரிடம் நான் சொன்னேன். படத்தில் அவர் இந்திய மற்றும் அமெரிக்க நடிகர்களிடமும் அவர் பேச வேண்டும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்