கோடம்பாக்கம் Corner

மாஸ் கதாநாயகர்கள் நடிக்கும் தமிழ் படங்களையும் அவர்கள் பேசும் ‘பன்ச்’ வசனங்களையும் இப்போதுவரை ஒழிக்கவே முடியாத நிலை.

குறிப்பாக ரஜினி படங்கள் ‘பன்ச்’ வனத்துக்குப் பெயர்போனவை. கதாநாயகனைப் போலவே ரஜினியின் படங்களில் வில்லன்களும் பன்ச் வசனம் பேசுவது வாடிக்கை. ‘அண்ணாமலை’ படத்தில் தான் பேசிய பன்ச் வசனம் பற்றி தற்போது நினைவு கூர்ந்திருக்கிறார் ராதா ரவி.

‘பாட்ஷா’ படத்தில் ரஜினி, ‘நான் ஒரு தடவை சொன்னா’ என்ற வசனத்தைப் பேசியிருப்பார். அதேபோல ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்தில் இடம் பெறும் ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற வில்லன் ராதா ரவியின் பன்ச் வசனமும் பெரும் புகழ்பெற்றது. இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள ராதாரவி, அந்த வசனம் வெளிவந்த விதம் பற்றிய கதையை சுவாரசியமானப் பின்னணியைக் கூறியுள்ளார். “பொதுவா நான் நடிக்கிற படங்கள்ல என்னோட மேக்கப், தோற்றம், மாடுலேஷன் இதையெல்லாம் சொந்தமா அமைச்சுக்குவேன். இயக்குநர்களும் என்கிட்ட அதை விட்ருவாங்க.. ஏன்னா.. என்னோட கேரக்டர் நல்லாயிருக்கணும்.. ரசிகர்கள்கிட்ட அது நல்லா ரீச் ஆகணும்ன்னு நினைப்பேன்.

அப்படித்தான் இந்த ‘அண்ணாமலை’ படத்துலேயும் நினைச்சேன். மேனரிசமா மார்லன் பிராண்டோ ‘காட்பாதர்’ படத்துல செஞ்ச மாதிரி தலைல சொரியறதை செய்யணும்ன்னு செஞ்சு பார்த்தேன். அப்புறம்தான் இதை ‘நாயகன்’ல கமல் செஞ்சுட்டாரேன்னு தோணுச்சு.. சரின்னு அப்படியே கையைப் பின்னாடி கொண்டு போய் அடிக்கடி முதுகைத் தேய்க்கிற மாதிரி பேசுறதை மேனரிசமா வைச்சுக்கிட்டேன். அப்புறம் ரஜினி ஸார் அடிக்கடி என்கிட்ட ‘இதுல டிரேட் மார்க்கா வர்ற மாதிரி ஏதாவது டயலாக்கை பிடிங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. நானும் அது பத்தியே யோசனை செஞ்சுக்கிட்டிருந்தேன். அந்த யோசனைல வந்ததுதான் நிழல்கள் ரவிகிட்ட நான் பேசுற அந்த ‘கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்’ என்ற டயலாக். இது நல்லாயிருந்ததால படம் முழுக்க வைச்சுக்கிட்டாங்க..

ஆனால், இந்த டயலாக் என்னோடதுல்ல.. ‘படிக்காத மேதை’ படத்துல வந்த வசனம்தான். அந்தப் படத்துல சிவாஜி அப்பாவை வீட்டைவிட்டு துரத்திருவாங்க. அவருக்கு வேற வேலையும் தெரியாது. எங்க போறதுன்னு தெரியாம இருக்கிறவரை துரைசாமின்ற நடிகர் மம்மட்டி வேலைக்குக் கூட்டிட்டு வருவாரு.. அதைப் பார்த்திட்டு சிவாஜி அப்பா.. ‘இதை வைச்சு என்ன செய்றது’ன்னு அப்பாவியா கேப்பாரு. அப்போ துரைசாமி அதை வைச்சு எப்படி மண்ணு தோண்டுறதுன்னு சொல்லிக் கொடுத்திட்டு.. ‘வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்.. தெரியாததையெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டி வரும். கத்துக்கிட்டுத்தான் ஆகணும்.. கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு புரியும்’ன்னு சொல்லுவாரு..

அந்த டயலாக் இந்த நேரத்துல எனக்கு சட்டுன்னு ஞாபகம் வந்தது.. உடனேயே அப்படியே பக்குன்னு பிடிச்சுட்டேன். இத்தனை வருஷம் கழிச்சும் இன்னிக்கும் ஒரு வில்லன் நடிகர் பேசுன டயலாக்குக்கு இத்தனை மாஸ் இருக்குறதை நினைச்சா ரொம்பவும் பெருமையா இருக்கு” என்று கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்