கோடம்பாக்கம் Corner

ஹாலிவுட்டின் முதுபெரும் இயக்குநர்களில் ஒருவரான ரிச்சர்டு அட்டென்பெரோ இயக்கிய காந்தி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி இந்தியாவுக்கான முதல் ஆஸ்கர் விருதை வென்று வந்தவர் பானு ஆதைய்யா.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் கருப்பு - வெள்ளை காலம் தொடங்கி பாலிவுட்டில் பணிபுரிந்து வந்த பழம்பெரும் பெண் ஆடை வடிவமைப்பாளர் ஆவார். பல ஆண்டுகளாக நோய் வாய்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள வீட்டில் தமது 91 வயதில் காலமானார்.

பானு ஆதைய்யாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர் 1956-ஆம் ஆண்டு வெளியான சி.ஐ.டி படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சுமார் 50 ஆண்டு திரையுலக பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குறிப்பாக வரலாற்றை பின்னணியாக கொண்ட படங்களுக்குப் பணியாற்றி உள்ளார். 1990-ஆம் ஆண்டு வெளியான ‘லெக்கின்’, 2001-ஆம் ஆமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘லகான்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும் பெற்று உள்ளார். இதேபோல அவர் 1983-ம் ஆண்டு ரிச்சர்டு அட்டென்பெரோ இயக்கி உலகம் முழுவதும் புகழ்பெற்ற ‘காந்தி’ படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கார் விருதை பெற்று இருந்தார். ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்