கோடம்பாக்கம் Corner

தமிழ்த் திரையில் சாமானியர்களின் பிரதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் நடிகர் முரளி. அப்பாவின் வழியில் இவரது மகன் அதர்வா முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக வெற்றிபெற்றுள்ளார்.

முரளி -சோபனா தம்பதியருக்கு அதர்வா இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தவர். சென்னையில் வளர்ந்த இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளனர். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் அதர்வா.

கார்த்திக் ராஜாவைப் புகழும் மிஷ்கின்!

கடந்த 2009 -ஆம் ஆண்டு ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதில் சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ இப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டு. 2012-ம் ஆண்டு கேனிஸ் சர்வதேசப் பட விழாவிலும் திரையிடப்பட்டது. அதன்பின் பல படங்களில் நடித்தாலும் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்து தனது திறமையை நிரூபித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார். இதைத் தொடர்ந்து இரும்புக் குதிரை, சண்டி வீரன், கணிதன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்தார். நடிகை நயன்தாராவுடன் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்துள்ளார்.

விஜய்சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன்!

தற்போது அதர்வா நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகிவருகின்றன. இதற்கிடையில் அதர்வா கோவா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இது பற்றி சமீபத்தில் அவர் தனது வீட்டில் விவரத்தை தெரிவிக்க அதர்வாவின் காதலுக்கு சம்மதம் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனராம். இதனையடுத்து வரும் 2021 ஜனவரி, அல்லது பிப்ரவரியில் அதர்வா திருமணம் நடைபெறும் என அதர்வா செய்தித் தொடர்பாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், மாஸ்டர்’படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.