கோடம்பாக்கம் Corner

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம்.

அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம். நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது 'எழுந்து வா'. இந்தப் பாடல் குறித்து 'எழுந்து வா' பாடல் குழுவினரிடம் கேட்ட போது "சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப்பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன.

நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்கலாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள்! ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள்! ஏனெனில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து என்றார்கள். கரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச் சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் ஆர்யன் தினேஷ் தங்களுடைய குரல்களின் மூலம் இருவகை கொண்ட மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் நேரத்தில், இந்த கூட்டணிக்கான வரிகளை திவ்யா லீ நாயர் எழுதியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.