இரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து தன் நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்ணனி பாத்திரத்தில் நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் "பூமிகா" படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் படம் குறித்து கூறும் போது:
50 பெண் பிரபலங்கள் வெளியிட்ட படத் தலைப்பு!
"பூமிகா" திரைப்படம் ஒரு ஆழமான உணர்வுகளுடன் கூடிய திரில்லர் படம்., பல எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். தனிப்பட்ட வகையில் ஐஷ்வர்யா ராஜேஷ் உடைய அசரவைக்கும் நடிப்பு எனக்கு பெரும் திருப்தியை அளித்தது. அவர் இப்படத்தின் ஆரம்பகட்டத்தில் இருந்தே, மிகுந்த உற்சாகமுடன், கடுமையான ஈடுபாட்டுடன் இப்படத்தில் பங்கேற்றார்.
கார்த்திக் ராஜாவைப் புகழும் மிஷ்கின்!
நீலகிரியில் படப்படிப்பு நடைபெற்றபோது, பலவிதமான பருவ நிலை மாறுபாடுகளால் படக்குழு மொத்தமுமே கடும் இன்னல்களுக்கு உள்ளானது. ஆனால் அப்போதும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கடுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் ஒவ்வொரு ஷாட்டிலும் அற்புதமான நடிப்பை வழங்கினார்” என்றார் இயக்குநர் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படம் மூலம் பாராட்டை பெற்றிருக்கிறார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்