மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து 150 கோடி வசூல் செய்த ‘லூசிஃபர்’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் மல்லுவுட் திரையுலகில் தடம் பதித்தார் முன்னணி நடிகரான பிருத்விராஜ்.
அவருக்குத் தற்போது கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. கொரொனா ஊரடங்கு தொடங்கியபோது ஜோர்டான் நாட்டில் ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துவந்தார். பின்னர் 45 நாட்கள் விமானம் இல்லாமல் சிக்கொண்ட பிருத்வி ராஜ் பின்னர் மோகன்லாலின் செல்வாக்கால் மத்திய அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் படக் குழுவினருடன் கேரளம் வந்து சேர்ந்தார்.
ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியிட்டார் ஜெயம் ரவி!
அப்போதெல்லாம் வராத கொரோனா தொற்று, தற்போது இவர் ஜன கண மன என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வந்தபோது வந்து விட்டது. இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
50 பெண் பிரபலங்கள் வெளியிட்ட படத் தலைப்பு!
மேலும், படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பிரித்விராஜ் தெரிவிக்கும் போது, “அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்றிவிட்டது, தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்