கோடம்பாக்கம் Corner

சஹோ படத்தைத் தொடர்ந்து ராதா கிருஷ்ணகுமார் என்ற தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’.

இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘முகமூடி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணிக் கதாநாயகியாக உள்ளார். இந்தப் படம் ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதை என்று கூறப்படுகிறது.

800 படத்திலிருந்து வெளியேறினார் விஜய்சேதுபதி!

இந்தப் படத்தை தமிழிலும் ஒரேநேரத்தில் வெளியிடும் நோக்கத்துடன் சத்யராஜுக்கு முக்கிய வேடம் கொடுத்துள்ளனர், இவருடன் பாக்யஸ்ரீ, குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ஜெயராம், சச்சின் கெடேகர், பீனா பெனார்ஜி, முர்லி சர்மா, ஷாஷா சேத்ரி, பிரியதர்ஷி, ரித்தி குமார், சத்யன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடிக்கிறது. தற்போது இந்தப் படத்தில் தமிழ் சினிமாவிலிருந்து ஒரு முக்கிய பிரபலம் இணைந்துள்ளார். அவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ஆமாம் ராதே ஷ்யாம் படத்திற்கு அவர்தான் காதல் கீதங்களை இசையமைக்க உள்ளார். ராதே ஷியாம் படத்தின் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசைப்பயணத்தில் இது மிகப்பெரிய பட்ஜெட் படம். தான் பிரபாஸ் படத்தில் இணைந்திருப்பது குறித்து இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.

வொண்டர் வுமன் புகழ் நாயகியின் வரலாற்று அவதாரம்!

தற்போது ராதே ஷியாமின் படப்பிடிப்பு இத்தாலியில் நடந்து வருகிறது. கொரோனாவையும் மீறி தனி விமானத்தில் இத்தாலி சென்று படக்குழு படப்பிடிப்பு நடத்தி வருகிறது. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 23 ஆம் தேதி ராதே ஷியாம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளது படக்குழு.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!