தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் திடீர் வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்து போயுள்ளது.
கடந்த வாரம் ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநகரின் பல தாழ்வான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தெலுங்கானா மாநிலம் முழுவதுமே கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
வரலாறு காணாத இந்த இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு தெலுங்குத் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதேபோல நடிகர் மகேஷ் பாபுவும் ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரபல நடிகர்கள் நாகார்ஜூனா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்கள். மேலும் பல நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்