அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெற்றிபெற்றது.
இதனால் இயக்குநர் வினோத், அஜித் - தயாரிப்பாளர் போனிகபூர் -யுவன்சங்கர் ராஜா ஆகிய நால்வரும் மீண்டும் வலிமை படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் அடுத்த கட்ட நிலவரம் என்ன என்று தெரிந்துகொள்வதற்காக தல அஜித்தின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் ‘கொரோன காலக்கட்டம் முடிந்தபின் தான் படப்பிடிக்குக்கு வருவேன்’ என்று கூறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த செய்திகளுக்கு அஜித் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. ஆனால், இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கராஜா, எந்த ஒரு பேட்டி என்றாலும் அஜித்தை பாராட்டிப் புகழ்ந்து பேசுவார். அவர், இம்முறை ஒரு பேட்டியில் ‘வலிமை’ படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் “நான் இசையமைத்த படங்களில் இதுவரை இல்லாத அளவில் வலிமை படத்திற்கு பின்னணி இசையை கிட்டாரை மையப்படுத்தி உருவாக்கி வருகிறேன். அது பிரமாண்டமாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித், யுவன் ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்