விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் ‘தம்பி பிராபா’ என்று அவ்வியகத்தின் மூத்த தலைவர்களால் அழைக்கப்பட்டவருமான வேலுபிள்ளை பிரபாகரனின் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை மையப்படுத்தி ‘சீறும் புலி’
என்ற தலைப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா பிரபாகரனாக நடிக்கிறார். ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நீலம், உனக்குள் நான், லைட் மேன் ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ்குமார் இயக்குகிறார்.
நெட்பிளிக்ஸில் கீர்த்தி சுரேஷ்!
தம்பி வே. பிரபாகரனின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு சீறும்புலி படத்தின் முதல் தோற்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகள் அணிந்திருக்கும் ராணுவ உடையில் பாபி சிம்ஹா தோன்றியுள்ளார். அவர் அருகில் ஒரு புலி உள்ளது. அதன் தலைமேல் கைவைத்தபடி நாற்காலியில் அமர்ந்துள்ளார் பாபி சிம்ஹா. மக்கள் தலைவனின் எழுச்சி, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ஆகிய வாசகங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.
ஷங்கரின் ‘இந்தியன் 2’ கோபமும் லைக்காவின் விளக்கமும்!
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதுவும் போஸ்டரில் இடம்பெறவில்லை. இந்த இடத்தில் கவிஞர் தாமரை, 800 திரைப்பட விவகாரத்தில் விஜ சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது “ உங்கள் தோற்றப்பொருத்தம் பிரபாகரனாக நடிக்கத் தகுந்ததே தவிர, முத்தையா முரளிதரனாக அல்ல; கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். அப்போது உங்களுக்குத் தெரியும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்