கோடம்பாக்கம் Corner

தற்போது நெற்றிக்கண் படத்தின் முதல் கட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் நயன்தாரா.

ஹைதராபத்தைவிட தற்போது சென்னையே பாதுகாப்பான பகுதி என்பதால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சினிமா படப்பிடிப்புகாக கமலஹாசனின் உறவினரும் நடிகையுமான அனுஹாசன் மிகப்பெரிய கடற்கரை வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அதில் மொத்தம் 11 அறைகள். இரண்டு கிச்சன்கள், ஒரு பார், ஒரு ஸ்னூக்கர் ரூம், நடனம் ஆட ஒரு பால் ரூம் என பிரம்மாண்ட பங்களா என்கிறார்கள். அனுஹாசன் ‘நயன் தாரா ராசியானவர் அவரது படத்துக்குத்தான் முதலில் வாடகைக்குக் கொடுப்பேன்’ என்று சொன்னதில் கிரஹப் பிரவேசன் முடிந்து 6 மாதமாக ஷூட்டிங் வாடகைக்கு விடாமல் வைத்திருந்துள்ளார். அங்கே முதல் முறையாக நயன் தாராவின் நெற்றிக்கண் 15 பேர் கொண்ட சிறிய குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. படக்குழுவில் இருக்கும் இயக்குநர் உள்ளிட்ட 15 பேர், தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியிலிருந்து கோவிட் 19 பரிசோதனைக்குப்பின் வரவழக்கப்பட்டுள்ள 5 செக்யூரிட்ட்டிகள், நயன் தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவருடன் சேர்த்து 22 பேர், 14 நாட்கள் நடைபெறும் முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அந்த வீட்டிலேயே தங்கியிருக்க உத்தரவு போட்டுவிட்டார்களாம். இதற்காக கோவளம் காவல் நிலையத்தில் அனுமதியும் வாங்கியிருக்கிறார்கள். இந்த கடற்கரை பங்களாவில் எடுக்கப்பட்ட படங்களை ‘கோவா’ எனக் குறிப்பிட்டு தனது இண்டாகிராம் பக்கத்தில் படங்களைப் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

தற்போது நயன்தாரா தன்னைப் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் எத்தனை முக்கியத்துவம் கொடுத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத கதாநாயகியாக மாறிவிட்டார். கடைசியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் குறிப்பை அனுப்பியிருந்தார் நயன் தாரா. அவரை பேட்டி எடுக்கலாம், செய்தி சேகரிக்கலாம் என்று அனுஹாசன் பங்களாவுக்குச் சென்ற முன்னனி நாளிதழின் நிருபரை பங்களாவின் வாசலிலிலேயே நிற்க வைத்து அனுப்பிவிட்டார்களாம் ஆஜான பாகுவான செக்யூரிட்டிகள்.

நயந்தாரா மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வந்தாலும் தற்போது தமிழில் மட்டும் நான்கு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தான் நடிக்கும் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீடு உள்ளிட்ட எந்த விளம்பர நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். ஒரே ஒருமுறை ஆர்யாவின் அழைப்பை ஏற்று அவருடைய தம்பி சத்யா நடித்த ’அமரகாவியம்’ படத்தின் இசை வெளியீட்டு வந்ததுதான் நயன்தாரா கடைசியாகக் கலந்துகொண்ட சினிமா நிகழ்ச்சி. திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் மறுப்பு சொல்லிவரும் இவர், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் (கோரோனா காலத்துக்கு முன்பு) பர்தா அணிந்து ஹைதராபாத் ஷாப்பிங் மால்களுக்கு வருவார் என்கிறார்கள். அதேநேரம் சினிமா பார்ட்டிகளுக்கு அழைப்பிருந்தால் ஆஜராகிவிடும் நயன்தாரா, விரைவில் நண்பர்களுக்கு தங்களது திருமண அறிவிப்பு பார்ட்டி கொடுக்கவிருப்பதாகவும் இதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் அனைவரும் கோவிட் 19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதற்கு தாமே செலவு செய்வதாகச் சொல்லியிருக்கிறார். டிசம்பர் மாதம் இந்தப் பார்ட்டி உறுதி என்கிறார்கள். திருமணம் 2021 ஜனவரி 16-ம் தேதி என நாள் குறித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த மோதிரம் மாற்றிக்கொள்ள இருக்கும் பார்ட்டிக்கான நெற்றிக்கண் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ஹைதராபாத் செல்ல இருக்கிறார் நயன்தாரா. பார்ட்டி என்றாலே தனது உடலை முழுவதுமாக மறைக்கும் வெஸ்டர்ன் ஸ்கேர்ட்ஸ்களில் வந்து கலக்கும் நயன்தாரா பலசமயங்களில் டிசைனர் ஷிபான் சேலைகளில் மணிக்கட்டுவரை மறைத்திருக்கும் காண்ட்ராஸ்ட் பிளவுஸ்கள் அணிந்துவந்து ‘செம்ம’ என்று என்று பாராட்ட வைப்பார். ஸ்கெர்ட்ஸ் மற்றும் அணியும் புடவைகளுக்கு ஏற்ப கைக்கடிகாரம் அணிவதில் அலாதிப் பிரியம் கொண்டவர் நயன்தாரா. நேரம் தவறாமையை கடைபிடிக்கும் நயன்தாராவிடம் 200-க்கும் அதிகமான கைக்கடிகார சேமிப்பு இருப்பதாகக் கூறுகிறார் அவரது காஸ்யூம் மற்றும் ஒப்பனை உதவியாளரான ராஜு. ஐய்யா படம் தொடங்கி இன்று வரை ராஜு அவரிடம் வேலை செய்கிறார். இடையில் கால்ஷீட் மேனேஜராகவும் இருந்த ராஜுவிடமிருந்து அந்தப் பொறுப்பை எடுத்து தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் கொடுத்துவிட்டார் நயன்தாரா.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.