சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி கட்சி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.
ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை. இந்நிலையில் கோரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிவிட்டது. ஆனால், தமிழக சட்டசபைக்கு 2021- ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தான் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் எழுதியதாக கடிதம் ஒன்று வைரஸ் போலப் பரவியது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முத்து’படத்துக்காக வசனம் எழுதிய ரஜினி!
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்தக் கடிதம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்: என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்
இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் ரஜினி அரசியலுக்கு வர நினைத்தாலும் அதற்கான சூழ்நிலை தற்போது அமையவில்லை என்பதும் அவர் அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்