கோடம்பாக்கம் Corner

தென்னிந்திய மொழிகளில் முன்னணிக் கதாநாயகியான காஜல் அகர்வால், பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட மாஸ் நடிகர்களின் படங்களில் கமர்ஷியல் கதாநாயகி வேடங்களில் இடம்பிடித்தார். இதுவரை நடிப்பதற்கான சிறந்த வாய்ப்பு என்று காஜல் அகர்வாலுக்கு அமைந்தது இல்லை. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவுக்கும் கடந்தமாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதைத் தொடர்ந்து அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் நட்சத்திர ஹோட்டலில் இல்லாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது.

திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கின்றன. காஜல் அகர்வாலுடன் நடித்த நடிகர், நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்குத் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். திருமணம் முடிந்தாலும் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.