கோடம்பாக்கம் Corner

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் இப்படத்தில் தொழில்நுட்ப குழுவிலும், நடிகர்கள் குழுவிலும் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு பேரின்ப செய்தியாக, தமிழக இளைஞர்களின் இதய நாயகியாகவும், நடிப்பிலும் அசத்தி வரும் மாளவிகா மோகனன் விஜயின் மாஸ்டர் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அதேநேரம் தனுஷுக்கு ஜோடியாக நாயகியாக இணைந்திருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் ஜி தியாகராஜன் கூறியதாவது...

'சூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா

இளம் திறமையாக கலக்கி வரும் நடிகை மாளவிகா மோகனனை, எங்களின் அடுத்த தயாரிப்பான தனுஷின் 43-வது படத்தை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வெகு சில நடிகைகளே குடும்ப பாங்கிலான நம் வீட்டு பெண் மற்றும் மாடர்ன் தோற்றம் என இரண்டிலும் அசத்தலாக இருப்பார்கள். அந்த வகையில் மாளவிகா மோகனன் இரண்டு தோற்றங்களிலும் மிக எளிதில் பொருந்துபவராக இருக்கிறார். தென்னிந்தியாவில் பல மொழி திரைப்படங்களிலும், அழுத்தமான பாத்திரங்களில் தோன்றி திறமையான நடிப்பை தந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை இந்த இளம் வயதில் அவர் பெற்றிருப்பது பெரும் ஆச்சர்யம். அவரது பாத்திரம் இப்படத்திலும் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்..

தல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்!

தனஷின் 43-வது படம் கூறித்து தற்போதைய நிலை குறித்து கூறும்போது.... இப்படம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, ஆக்சனும் உணர்வுகளும் இரண்டறக்கலந்த அட்டகாசமான கமர்ஷியல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான ரசிகர்களும் கண்டிப்பாக இப்படத்தினை கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஜீவி பிரகாஷ் தன் இசையால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்து, பெரும் சாதனைகள் செய்து வரும் நிலையில் அவரது இசை இப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். மிகத்திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழு படத்தில் இணைந்துள்ளது. இப்படக்குழு மிகச்சரியான படைப்பை தந்து, பெரு வெற்றியை பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!