கோடம்பாக்கம் Corner

பிரபு புருஷோத்தமன் என்கிற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில், ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்

அதிதி பாலன். அந்தப் படத்தில் எதிர்பாராதவிதமாக எச்.ஐ.வி.தொற்றுக்கு ஆளாகி மரணத்தை தழுவும் முன் சமூகத்தில் ஆண்களின் பார்வையில் பின்பற்றப்படும் சுய ஒழுக்கம் பற்றி கேள்வி கேட்கும் பெண்ணாக சிறப்பாக நடித்ததன் மூலம் அதிதி பாலனுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால், 'அருவி' படத்துக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் அவர் நடிக்காமல் இருந்தார். மலையாளத்தில் நிவின் பாலி, மஞ்சு வாரியர் நடிப்பில் லிஜு ஜோசப் இயக்கவுள்ள ‘படவெட்டு’ என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

தற்போது நிவின் பாலி படத்தைத் தொடர்ந்து, மற்றொரு மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் அதிதி பாலன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கோல்டு கேஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தைத் தானு பலக் இயக்கவுள்ளார். பிளான் ஜே ஸ்டுடியாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரகாஷ் அலெக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்கு ஸ்ரீநாத் திரைக்கதை எழுதுகிறார். பிருத்விராஜ் தற்போது நடித்து வரும் ‘ஜன கண மன’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ‘கோல்டு கேஸ்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இரு படங்களுக்கு முன்பாக அவர் ஜோர்டான் நாட்டில் ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.