கோடம்பாக்கம் Corner

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கட்சியின் சின்னமான ‘டார்ச் லைட்’ பொறிக்கப்பட்ட கோட்டுடன் கலந்துகொண்டு வருகிறார் கமல்ஹாசன். ஒரு பக்கம் பிக்பாஸ் இன்னொரு பக்கம் கட்சிக் கூட்டம் என்று ரகளை கட்டிவரும் அவர், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தை சமூக இடைவெளியுடன் சென்னையில் நேற்று முந்தினம் தொடங்கினார்.

இன்று வரை நடக்கும் அந்த 3 நாள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பல அணிகளை சார்ந்த நிர்வாகிகள் என சுமார் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

2021 தமிழகச் சட்டமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர் சேர்ப்பு, மண்டல வாரியாக உள்ள பிரச்சனைகள், தேர்தல் வியூகம், பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் இறுதி நாளான இன்று காலையில் பேசிய கமல், ‘மக்கள் நீதி மையத்தின் கூட்டணி திராவிரத் தத்துவத்துடன் தானே தவிர, திராவிடக் கட்சிகளுடன் இல்லை, நாம் தான் அரசியல் மாற்றே தவிர, நாம் மற்றவர்களுடன் கூட்டணி அவைத்தால் அதற்கு மக்களிடம் அரசியல் ஆதரவு கிடைக்காது’ என்று பேசியுள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள் 5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கும் நமது தலைவர் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் 10 சதவீதம் வரை வாக்குகளைப் பெறலாம். திராவிடத்துடன் கூட்டணி என்பவர், ஏன் திராவிடக் கட்சிகளுடன் வைக்கக்கூடாது. தலைவர் ரொம்பவே குழப்புகிறார் ‘ என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.

இதற்கிடை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசன் சென்னையின் மயிலாப்பூரில் போட்டியிட உள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர் ஊடகங்களுக்கு ‘ஆஃப் தி ரேக்கார்ட்’ தகவல்களை தந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒரு தனியார் நிறுவனம் சர்வே நடத்தி உள்ளது. அந்த சர்வேயில் சென்னையில் அக்கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகத் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மைலாப்பூரில் அவர் நின்றால் வெற்றி உறுதி என அந்த சர்வேயில் தெரிய வந்ததாகக் கூறியுள்ளனர். இன்றைய 3-ம் நாள் கூட்டத்தில் சமூக இடைவெளி காற்றில் பறந்துவிட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.