கோடம்பாக்கம் Corner

சிம்புவின் குறுகிய காலப் படமான ‘ஈஸ்வரன்’ படத்தை ஒரே மூச்சில் எடுத்து முடித்துவிட்டனர்.

படமுடிப்பு முழுவதும் நிறைவடைந்ததையொட்டி படக்குழு சென்னை திரும்பி, பின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் ஈஸ்வரன் படத்தில் சிம்பு பம்பு பிடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி, ‘நிஜப் பாம்பின் வாயைத் தைத்து படக்குழு பயன்படுத்தியுள்ளதாக செய்தியைப் பரப்பினர். அது படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. இதனால் விலங்குநல வாரியத்திடமிருந்து ஈஸ்வரன் படக்குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்துள்ளது. அலறிய படக்குழு தற்போது சிம்பு கையில் இருப்பது நெகிழிப் பாம்பு என பிளாட்டை மாற்றிப் போடுகிறது. இதுபற்றி படக்குழு ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் அறிக்கை இதுதான்:

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ முதல் தோற்றமும் முழுமையான பின்னணியும்!

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'ஈஸ்வரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின்றோம்.

உதயநிதி ஸ்டாலிக்கு மீண்டும் ஒரு அட்டகாசக் கதாநாயகி!

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார், நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவு படுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம். படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டிதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.

நன்றி
மாதவ் மீடியா நிறுவனம் & சுசீந்திரன்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.