கோடம்பாக்கம் Corner

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது 232-வது படத்தின் தலைப்பையும் டீசரையும் வெளியிட்டார் கமல்.

அப்போது படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரையும் மேடைக்கு அழைத்து டீசர் ட்ரைலர் தயாரிப்பில் அவரகளது உழைப்பைப் பற்றி கூறி பாராட்டினார். இப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் டைட்டில் டீஸரே 2 நிமிடங்கள் 22 நொடிகளுக்கு வந்துள்ளது.

கமல் - லோகேஷ் கனகராஜ் முதல் தோற்றம் ரெடி!

ஏற்கனவே கமலஹாசன் நடிப்பில் 29 மே 1986ஆம் வருடம் ‘விக்ரம்’ என்ற பெயரில் வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. தற்போது, இந்த படமும் அதே பெயரில் மீண்டும் வரவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

புதிய ‘விக்ரம்’ டீசரில் அரசியல்வாதிகளையும் காவல் அதிகாரிகளையும் பிரியாணி விருந்துக்கு அழைத்து அவர்களை பரலோகம் அனுப்ப கமல் வீடு முழுவதும் ஆயுதங்களைப் பதுக்கி வைப்பதும், சாப்பாட்டு மேஜைக்கு கீழேயிருந்து இரண்டு கோடாரிகளை உருவி எதிரிகளின் நெஞ்சில் பாய்ச்சுவதுமாக டீசரே வன்முறையில் துவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

விக்ரம் : 35 ஆண்டுகள்

இதற்கிடையில் படத்தின் இயக்குநர் ‘லோகேஷ கனகராஜ் ‘கைதி’ படத்தில் வைக்கப்பட்ட பிரியாணிக் காட்சிக்கு கிடைத்த வரவேற்பை நீங்கள் அறிவீர்கள். விக்ரம் படத்திலும் இதேபோல விருந்து இருப்பதை டீசர் சொல்லியிருக்கும் என்று தடபுடலான தளை வாழை விருந்து முன்பு கமல் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு கமல் ரசிகர்களை உற்காகப்படுத்திருக்கிறார்.

நேற்று பல்வேறு தரப்பினரும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர். நடிகை ஆண்ட்ரியா ஜெராமியா ‘கமலுடன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட இருவரும் ராணுவ உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ‘சினிமாவை எனக்குக் கற்றுக்கொடுத்த ஆளுமையே உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என வாழ்த்துக் கூறியிருப்பதை கமல் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

விக்ரம் டீசர்:

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.