கோடம்பாக்கம் Corner

சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஈஸ்வரன்’ என்ற தலைப்பில் நடித்து முடித்து படத்துக்கான குரல் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தில் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரிலும் மற்றொரு ஈஸ்வரன் குடிகொண்டுள்ளார்.

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் பிரச்சனை இருக்கிறது : உறுதிப்படுத்தினார் ‘தளபதி’ விஜயின் அம்மா!

கடந்த ஆண்டு மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். நேர்கொண்ட பார்வையின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில், அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த மாதம்தான், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்தது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. கோரோனா பயம் காரணமாக அஜித் இதில் கலந்துகொள்ளமாட்டார் என்றார்கள்.

ஆனால், அஜித் தற்போது ஹைதராபாத்தில் வலிமை படப் பிடிப்பில் போதிய பாதுகாப்புடன் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அஜித் ஏற்றுள்ள கதாபாத்திரன் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்று ட்ரெண்டிங் ஆக்கி ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளார்கள். ஏற்கனவே, அஜித் மங்காத்தா, என்னை அறிந்தால் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.