கோடம்பாக்கம் Corner

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

கோரோனா பயத்தால் இன்று தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட திரையரங்குகளுக்கு ஒரு ஈ காக்கா கூட வரவில்லை. இந்நிலையில் ஆளில்லா கடையில் டீ ஆற்றும் மாஸ்டரைப்போல சந்தானம் நடித்துள்ள 'பிஸ்கோத்' தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது!

இப்படத்தில் வரும் வரலாற்றுக் கதைகொண்ட பிளாஷ் பேக் காட்சியில் ரோமானிய வீரராக வருகிறாராம் சந்தனாம். அதேபோல தமிழ் ராஜாவாகவும் தொன்றுகிறாராம். இந்தக் காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள். இந்த பிளாஷ் பேக் காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்துக் கொடுத்தாராம்.

பிஸ்கோத் படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது " படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் 'பிஸ்கோத்' என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம் .வடிவேலுவுக்கு எப்படி 'இம்சை அரசன் 'அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு 'பிஸ்கோத்' படம் அமையும். இப்படத்தில் ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன.” என்று கூறுகிறார். ஆனால், ரசிகர்கள் பயப்படாமல் திரையரங்கு வரவேண்டுமே?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.