ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படத்தை இயக்கிய லக்ஷ்மன் ஜெயம் ரவியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் ‘பூமி’.
இது ஜெயம் ரவியின் 25வது படமாகும். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லாத காரணத்தால் பூமி படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடுகிறார்கள்.
இந்த படத்தின் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள படக்குழு தற்போது பரப்புரையின் அடுத்த கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் ஜெயம்ரவியை அனுப்ப இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாவதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய பட ப் பரப்புரைகள் நடந்துள்ளன.
பூமி படம், பாரம்பரிய விதைகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இழந்துவிட்டால் விவசாயம் என்னவாகும் என்கிற கதையைப் பேச இருக்கிறது. மேலும் விளைநிலங்களை அபகரித்துவரும் கார்ப்பரேட்களுக்கு எதிராக குரலையும் இப்படம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்