கோடம்பாக்கம் Corner

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் தமிழகத் திரையரங்குகள் மூடப்பட்டன.

இரண்டு மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகம் வெறிச்சோடியது. வீதிகளில் ஈ காக்காய் கூட இல்லை. பின்னர் செப்டம்பர் இறுதியில் மாநில அரசு கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கை தளர்த்திவந்த நிலையில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்கள் திறக்கப்பட்டும் கூட்டம் வராத நிலையில், விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானால்தான் பழையபடி ரசிகர்கள் திரளாக திரையரங்குக்கு வருவார்கள் எனக் கூறப்பட்டது.

இதனிடையே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு நேற்று இரவு, முதல்வரிடம் விஜய் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது. இந்தக் கொரிக்கையை ஏற்று, ஜனவரி 10-ம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்கள் கட்டாய முகக் கவசத்துடன் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அனுமதியை இன்று வழங்கியது.

இதனால் விஜய்யின் மாஸ்டர் அதிர்ஷ்டம் செய்த திரைப்படம் என விநியோகஸ்தர்கள் வருணித்து வருகிறார்கள். இதையடுத்து வரும் ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆகிறது என்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார். இதுவொருபுறம் இருக்க, மாஸ்டர் படத்தை தயாரித்துள்ள எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை 12.30 மணிக்கு மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று சிறிய வீடியோவுடன் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.