கோடம்பாக்கம் Corner

2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித்.

அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம்பெற்று கவனம் ஈர்த்தது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.