கோடம்பாக்கம் Corner

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், மெகா தொடர் நடிகை என வளர்ந்து`மேயாத மான்' படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றன. தற்போது இவர், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே போன்ற படங்கள் அவர் கைவசம் உள்ளன.

இந்நிலையில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர் தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அவர் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த செய்திகள் வெளியாகவில்லை.

அவரிடமே தொலைபேசி கேட்டோம். அப்போது நம்மிடம் கூறிய அவர் “ கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல படம். கதைப்படி சிம்புவுக்கு ஹீரோயின் கிடையாது. ஆதலால் நான் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். எதிர்காலத்தில் நிச்சயம் சிம்புவுடன் ஜோடியாக நடிப்பேன். அதேசமயம் சிம்புவுக்கும் எனக்கும் இந்தப் படத்தில் பல காட்சிகள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.