கோடம்பாக்கம் Corner

யதார்த்த மனிதர்கள் முதல் யதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குநர் கார்த்திக் பேசும்போது,

"ரொம்ப லைவ்-ஆன படம் இது. விஜய்சேதுபதி டிரைலரைப் பார்த்துவிட்டு, அவரின் சொந்த அனுபவங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்த வாழ்வோடு கனெக்ட் செய்யும் விதமாகவும் இந்த டிரைலர் இருப்பதாக சிலாகித்தார். இந்த டிரைலர் என்னை நிறைய பேசவைத்துள்ளது, எல்லாம் இந்தப்படம் செய்த வேலை என்றார். மேலும் "ஒரு பேமிலிமேனாக எனக்கு நிறைவா இருக்கு" என்றார். அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் 100% சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும். ரெஜினா கசான்ட்ரா இப்படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார், முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால் மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார். படத்தின் கதை, ஒரு பெற்றோர் ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள்.. அந்தக்குழந்தையாலும் அந்தக்குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளோம். இப்படத்தின் டிரைலரைப் பார்த்த அனைவரும் மிகப்பெரிய பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது" என்றார். இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.