கோடம்பாக்கம் Corner

எதிர்பாராமல் கொலைபழி ஒன்றில் சிக்கிக்கொள்ளும் கிராமத்து மக்களின் கதையை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படமாகக் கொடுத்தார் சுரேஷ் சங்கையா என்ற அறிமுக இயக்குநர்.

அதன்பின் அவர் பிரேம்ஜி அமரனை கதாநாயகனாக வைத்து ஒரு கிராமத்து அப்பத்தா பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை ‘சத்திய சோதனை’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார். இவர் தற்போது ஒரு ஆயுள் கைதியின் கதையை படமாக எடுக்க இருக்கிறார். இதில் கதையின் நாயகனாக நடிகர் செந்தில் நடிக்க இருக்கிறார்.

கடந்த 1979 -ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நகைச்சுவை நடிகாரான செந்திலுக்கு கவுண்டமணியுடன் இணைந்து நடித்தபிறகு பிரேக் கிடைத்தது. ‘கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் வாழைப்பழ காமெடி , சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கா போன்றவை இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

விஜய், அஜித், ரஜினிகாந்த், சரத்குமார், விக்ரம், கார்த்திக், விஜயகாந்த் என்று அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள செந்தில் கடந்த 42 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் 69 வயதுக்காரர். இப்போதுதான் முதல் முறையாக நாயகனாக நடிக்கிறார் செந்தில்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.