கோடம்பாக்கம் Corner

ராதிகா என்றாலே சின்னத் திரையுலகில் ‘ராணி தேனீ’ என்று அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரின் நடிப்பில் தற்போது சன் டிவியில் ‘சித்தி 2’ தொடர் ஒளிப்பரப்பாகி வருவதுடன் டி.ஆர்.பியில் நம்பர் 1 தொடராகவும் இருந்து வருகிறது.

அந்தத் தொடரிலிருந்து ராதிகா முற்றாக விலகுவதாக ராதிகா அறிவித்திருக்கிறார். அது குறித்து அவர் இன்றைக்கு ஊடகங்களுக்காக சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;

இந்த நிமிடத்தில் இருந்து சந்தோஷமும், கவலையும் கலந்த மனநிலையில் ‘சித்தி-2’ மற்றும் மெகா சீரியல்களில் இருந்தும் நான் விடைபெறுகிறேன். இத்தனையாண்டுகளாக என்னுடன் இணைந்து தங்களது கடின உழைப்பை நல்கிய சன் தொலைக்காட்சியின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் விடை கொடுக்கிறேன்.

‘சித்தி-2’ மேலும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். கவின், வெண்பா, யாழினி மூவருக்கும் எனது வாழ்த்துகள். எனக்கும் ராடான் நிறுவனத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வந்த எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது மானசீக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராதிகாவின் திடீர் விலகலுக்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்ததில், நடிகை ராதிகா இனிமேல் முழு மூச்சாக அரசியலில் இறங்கப் போவதாகவும் அதன் காரணமாகவே அவர் சீரியல்களில் இருந்து விலகுவதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சரத்குமார் தலைவராக இருக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் முன்னோட்டக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தனது கணவர் சரத்குமாருடன் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் நடிகை ராதிகா. இந்தச் சுற்றுப்பயணத்தின்போதுதான் ஓரிடத்தில் பேசும்போது தான் இனிமேல் முழுமையாக அரசியலில் களம் இறங்கப் போவதாக அறிவித்தார் ராதிகா. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு சின்னத்திரை சீரியல்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தற்போது, ராதிகா சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலும் மகளிரணியின் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கட்சிக்காக சரத்குமார் 10 தொகுதிகளைக் கேட்டு வருகிறார். அதில் சரத்குமார் தனக்காக நாங்குநேரி தொகுதியையும், ராதிகாவுக்காக சென்னையில் வேளச்சேரி தொகுதியையும் கேட்டிருக்கிறாராம். 10 தொகுதிகளைக் கேட்டாலும் இரண்டு தொகுதிகள் கொடுக்க அதிமுக கூட்டணியில் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே ராதிகாவின் மூத்த அண்ணன் ராதா ரவி பாஜவில் இணைந்து சீமானை கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறார். இதனால் சீமானின் தம்பிகள் ராதா ரவியும் சரத்குமாரும் நடிகர் சங்கத்தை வைத்து சுருட்டிய சுமார் 55 கோடி ரூபாய் குறித்துப் பதிவிட்டு வருவதுடன் டப்பிங் யூனியனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ராதாரவி ஆடிவரும் ஆட்டங்களையும் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

“சரத்குமார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை வைத்து நாடார் சமூக மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று அதிமுக அரசியல் கணக்குப் போடுகிறது. ஆனால், நாடார் மக்களின் ஆதரவு சுத்தமாக அவருக்கு இல்லை என்பதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகிய சீமானும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சாதி உணர்வைத் துறந்து தமிழர்களின் இன ஒருமைக்காக போராடி வருவதை நாடார் சமூக மக்கள் பெரிதும் மதித்து வருகிறார்கள். காரணம், நாடார் சமூக மக்கள் அனைத்து தமிழ் சாதிகளை தங்களது சகோதரர்களாக மதிப்பவர்கள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களை தொடக்கம் முதலே புறந்தள்ளாத நேசமுடையவர்கள். எனவே நடிகர் சங்க ஊழலில் சின்ன நடிகர்களிடம் பிடிபட்டுப்போன சரத்குமாருக்கு நாடார் மக்களின் ஒரு வாக்கு கூட விழாது” என்கிறார் பிரபல அரசியல் பார்வையாளரான ரவீந்திரன்.

எப்படியிருப்பினும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் புள்ளிகளின் மோதல்களைவிடவும் பாஜக தமிழ்நாட்டில் நட்சத்திரங்களை வைத்துச் செய்யும் அரசியல் சற்று அதீதமாகவே இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!