சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று' ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
அந்தப் படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. தற்போது சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி தயாரித்து வரும் படமொன்றில் சிறு வேடத்தில் நடித்து முடித்துள்ளர்.
இந்நிலையில் சன் டிவி நிறுவனம் தயாரிக்கவுள்ள சூர்யாவின் 40 வது படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். இதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார். சூர்யா - சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாக இது அமைகிறது.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. கோரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி சூர்யா 15 நாட்கள் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்