கோடம்பாக்கம் Corner

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்குப் பிரச்சனை ஏற்பட்டதால், அங்கிருந்து தனது இசைப்பதிவுக் கூடத்தை காலி செய்துகொண்டார் இளையராஜா.

தற்போது சென்னை தியாகராய நகரில், அதி நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் சொந்தமாக இளையராஜா இடம் வாங்கி அமைத்துள்ள, புதிய சவுண்ட் ஸ்டுடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து இரண்டு நாட்களாக வருகை தந்திருக்கிறார். நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டுடியோவை பார்வையிட்ட ரஜினிகாந்த், பின்னணி இசைப் பதிவு பணிகள், பாடல் ரெக்கார்டிங் உள்ளிட்டவற்றையும் பார்த்து ரசித்து, இசையமைப்பாளர் இளையராஜாவை வெகுவாக பாராட்டினார்.

திங்கட்கிழமை வந்து சென்றதோடு, மீண்டும், 2ஆவது நாளாக, செவ்வாய்க்கிழமையும், இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு வந்து சென்றுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் இசை கோர்ப்பு பணிகள் அங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் ஸ்டூடியோவுக்கு வருகை தந்த ரஜினி இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடினார். அப்போது, கோவிலுக்கு வந்து சென்ற உணர்வு ஏற்படுவதாக, இளையராஜாவிடம், ரஜினி கூறியதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!